உடலுக்கு நன்மையளிக்கும் கேழ்வரகு பக்கோடா….

உடலுக்கு  நன்மையளிக்கும் கேழ்வரகு பக்கோடா….

உடலுக்கு பல்வேறு நன்மையளிக்கும் ராகியில் பக்கோடா செய்வது எப்படி என்று தற்போது காணலாம்.

தேவையான பொருட்கள் :

பொட்டுக்கடலை மாவு – 2 தேக்கரண்டி வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 3
கேழ்வரகு மாவு – ஒரு கப் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை :

★முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

★பின் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலையை சேர்த்து அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

★அதில் கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து மாவு கெட்டியாகும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்

★இறுதியாக கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்த ராகி மாவை உதிரி உதிரியாக போட்டு பொரித்தெடுத்தால் ராகி பக்கோடா தயாராகிவிடும்.

Leave a Reply