திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் !!

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் !!

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் கால பைரவர் ஹோமமும், நேற்று நவகிரக ஹோமமும் நடந்தது.

அதையொட்டி காலை யாகசாலையில் நவக்கிரகஹோமம், பூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகாசாந்தி அபிஷேகம், நவக்கிரக கலசாபிஷேகம் நடந்தது. மாலை காமாட்சியம்மனுக்கு கலச ஸ்தாபனம் மற்றும் சிறப்பு தீப ஆராதனை நடந்தது.

ஹோம மஹோற்சவத்தில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி சீனிவாசுலு, கண்காணிப்பாளர்கள் பூபதி, சீனிவாசலு, கோவில் ஆய்வாளர் பாலகிருஷ்ணா மற்றும் அர்ச்சகர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் 11-ந்தேதி வரை காமாட்சி ஹோமம் (சண்டி யாகம்) நடக்கிறது.

Leave a Reply