ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு…?

ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு…?

சென்னை:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சென்னை, கடலூர் பகுதிகளில் நடந்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.


இந்நிலையில், தலைவர் 170 படத்தின் பூஜை வரும் 5ம் தேதி நடைபெறவுள்ளதால், ஜெயிலர் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


அசுர வேகத்தில் ஜெயிலர்
அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். நெல்சன் இறுதியாக டைரக்ட் செய்த ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் நடித்திருந்தார்.

இந்தாண்டு தமிழ்ப் புத்தாண்டில் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், பீஸ்ட் வெளியாகும் முன்பே ரஜினியின் தலைவர் 169 படத்தில் நெல்சன் கமிட் ஆகிவிட்டார். பீஸ்ட் தோல்வியால் நெல்சன் மாற்றப்படுவார் என சொல்லப்பட்ட நிலையில், ரஜினி அவர் மீது நம்பிக்கை வைத்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.


இறுதிக்கட்ட படப்பிடிப்பு
சென்னையில் தொடங்கிய ஜெயிலர் படப்பிடிப்பு, தற்போது கடலூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர், அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் சில முன்னணி நடிகர்கள் ஜெயிலர் படத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.. இந்நிலையில், ஜெயிலர் ஷூட்டிங் சத்தமே இல்லாமல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில வாரங்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என சொல்லப்படுகிறது.


ஜெயிலர் ரிலீஸ் தேதி
ஜெயிலர் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியதால் தான், தலைவர் 170 படத்தின் பூஜைக்கு ரஜினி ஓக்கே சொன்னதாகவும் தெரிகிறது. இந்நிலையில், தலைவர் ஷூட்டிங் 170 தொடங்கிவிட்டால், ரசிகர்களின் கவனம் அந்தப் படத்தின் மீது சென்றுவிடும் என்பதால், ஜெயிலர் ரிலீஸ் தேதியை விரைவில் படக்குழு அறிவிக்க உள்ளதாம்.

மேலும், ரஜினிக்கு எப்போதுமே தமிழ்ப் புத்தாண்டு ரொம்பவே ஸ்பெஷலாகும். அதனால், ஜெயிலர் படத்தை 2023 ஏப்ரல் 14ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிரது.


இதனிடையே ஜெயிலர் படத்தில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் ரஜினிக்கு திருப்தியாக வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், ஜெயிலர் கண்டிப்பாக சூப்பர் ஹிட் அடிக்கும் என ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு உடனடியாக தலைவர் 170 படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஜெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்புடன், டீசரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply