மழைக்காலத்தில் சுடச்சுட மிளகாய் பஜ்ஜி சாப்பிடலாம் வாங்க…

மழைக்காலத்தில் சுடச்சுட மிளகாய் பஜ்ஜி சாப்பிடலாம் வாங்க…

தேவையான பொருட்கள் :

கடலை மாவு – 1 கப்

பஜ்ஜி மிளகாய் – 6

வெங்காயம் – 2

வரமிளகாய் – 2

புளி – சிறிது

பூண்டு – 4 பல்

அரிசி மாவு – 1/2 கப்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

சோடா உப்பு – 1 சிட்டிகை

பெருங்காயத் தூள் – சிறிது

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • மிளகாயை இரண்டாக கீறி விதையை எடுத்து விடவும்.
  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், சோடா உப்பு, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி, பூண்டு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அரைத்த கலவையை கீறிய மிளகாய்களின் நடுவில் வைக்கவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி, எண்ணெயை சூடானதும் இதில் மசாலா பிரட்டிய மிளகாயை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • இதேப்போல் அனைத்து மிளகாயையும் செய்ய வேண்டும்.
  • இப்போது சூப்பரான மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி ரெடி!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction