சாரி ,,அதிகமா திருடிட்டேன்… 20 லட்சம் மதிப்பு நகையை திருடி ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகையை கொரியர் மூலம் திருப்பி அனுப்பிய வினோத திருடன்!

சாரி ,,அதிகமா திருடிட்டேன்… 20 லட்சம் மதிப்பு நகையை திருடி  ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகையை கொரியர் மூலம் திருப்பி அனுப்பிய வினோத  திருடன்!

காஜியாபாத்;

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ப்ரீத்தி சிரோஹி. இவர் தனது குடும்பத்தாருடன் அக்டோபர் 23ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காகச் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.

பிறகு அக்டோபர் 27ம் தேதி திரும்பி வந்துள்ளனர். அப்போது வீட்டிலிருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலிஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ப்ரீத்தி சிரோஹி வீட்டில் இருந்து முதுகில் பையை மாட்டிக் கொண்டு ஒருவர் வெளியே செல்லும் காட்சிப் பதிவாகியிருந்தது. மேலும் அவர் முதுகில் மாட்டியிருந்த பை ப்ரீத்தி சிரோஹியின் மகனின் பள்ளி புத்தகப் பை என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் ப்ரீத்தி சிரோஹி வீட்டிற்கு ஒரு கொரியர் வந்துள்ளது. அதில் திருடப்பட்ட நகை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் திருடிச் சென்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகையிலிருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகை திருப்பி அனுப்பியுள்ளதாகக் கொள்ளையன் கடிதம் எழுதியும் அனுப்பியுள்ளார்.

பின்னர் இது குறித்து போலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. பிறகு கொரியரில் இருந்த ராஜ்தீப் ஜூவல்லர்ஸ், சரஃபா பஜார் என்ற முகவரி எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து அங்குச் சென்று போலிஸார் விசாரித்தபோது ராஜ்தீப் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் எந்த கடையும் இல்லை என தெரிந்தது. மேலும் கொரியரில் இருந்த தொலைபேசி எண்ணும் போலியானதாக இருந்து. இதையடுத்து அந்த மர்ம திருடனை போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction