கொரில்லாக்களுடன் பழம், பர்கர், நூடுல்ஸ்… வெள்ளைப் புலியுடன் ஸ்விம்மிங்!!

கொரில்லாக்களுடன் பழம், பர்கர், நூடுல்ஸ்… வெள்ளைப் புலியுடன் ஸ்விம்மிங்!!

மிருகக்காட்சி சாலை காப்பாளர் ஒருவர் தான் பராமரித்து வரும் கொரில்லாக்களுடன் நூடுல்ஸ், பழம், பர்கர் என சாப்பிடும் வீடியோக்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் அள்ளி வருகிறார்.

நம் ஊரில் ரீல்ஸ், புதுப்புது ட்ரெண்ட் என இன்ஸ்டாவில் இளைஞர்கள் கோலோச்சும் நிலையில், வெளிநாடுகளில் சாகச விரும்பிகள், மிருகக்காட்சி சாலை காப்பாளர்கள் என சுவாரஸ்யமான வேலைகளில் ஈடுபடும் நபர்கள் சமீபகாலமாக ட்ரெண்ட் ஆகி வருகின்றனர்.

அந்த வகையில் மிருககாட்சி சாலையில் பணிபுரியும் கோடி ஆண்டில் எனும் நபர் தொடர்ந்து தாங்கள் பராமரித்து வரும் கொரில்லாக்கள், வெள்ளைப் புலி, சிங்கம் ஆகியவற்றின் படங்கள், வீடியோக்களைப் பகிர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் பிரபல பதிவராக வலம் வருகிறார்.

அந்த வகையில் முன்னதாக இவர் தான் பராமரித்து வரும் கொரில்லாவுக்கு நூடுல்ஸ் ஊட்டி விடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மனிதர்களைப் போலவே நூடுல்ஸை சுவைத்து உண்ணும் இந்த கொரில்லாவின் வீடியோ 80 ஆயிரம் லைக்ஸ்களைக் கடந்து இன்ஸ்டாவில் ஹிட் அடித்துள்ளது.

இதேபோல் சுகிவா எனும் கொரில்லாவுடன் பர்கரை பகிர்ந்து உண்ணும் வீடியோ, மற்றொரு கொரில்லாவுடன் மாம்பழம் உண்ணும் வீடியோக்களையும் தன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக தான் பராமரித்து வரும் வெள்ளைப் புலியுடன் நீச்சல் குளத்தில் இவர் நீந்தி மகிழும் வீடியோவும் இன்ஸ்டாகிராமில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply