இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பவுர்ணமி தினம் வரை 5 நாட்கள் இருக்க வேண்டிய விரதம் பீஷ்ம பஞ்சக விரதம்!!

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பவுர்ணமி தினம் வரை 5 நாட்கள் இருக்க வேண்டிய விரதம் பீஷ்ம பஞ்சக விரதம்!!

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பவுர்ணமி தினம் வரை 5 நாட்கள் இருக்க வேண்டிய விரதம் பீஷ்ம பஞ்சக விரதம். பஞ்சகம் என்றால் ஐந்து. பீஷ்மர் 5 நாட்கள் இந்த விரதத்தில் இருந்தார் என்பதால் பீஷ்ம பஞ்சக விரதம் என்று அழைக்கப்படுகிறது.

பீஷ்மர் இந்த விரதம் இருந்து ஆத்ம சாதனையில் முன்னேறினார் என்று சொல்லப்படுகிறது. இந்த விரதத்தை கடைபிடிப்பதன் மூலமாக, மனஉறுதியும் தெளிவும் ஆன்மீக முன்னேற்றமும் பெறலாம்.

பிஷ்ம பஞ்சங்க நாட்களில் பல பக்தர்கள் முழுமையான விரதம் இருப்பார்கள். அதாவது நிர்ஜலம் நீர் கூட அருந்தால் விரதம் இருப்பவர்கள் (இது ஒருவருடைய உடல்நிலை பொருத்து கடைபிடிக்க வேண்டும்) அல்லது இந்த ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாள் ஒருமுறை ஒரு சிறிய தேக்கரண்டி அளவிற்கு பஞ்ச காவ்யத்தில் ஏதாவது ஒன்றை குடிக்கலாம் வேறு எதையும் உண்ணக்கூடாது.

முதல் நிலை விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் இந்த 5 நாட்களில் பழங்களும்(கொய்யா பழம், மாதுளம் பழம் போன்ற நிறைய உள்ள பழங்களை தவிர்த்தல் நல்லது) பேரிச்சம் பழம், உலர்ந்த திராட்சை போன்றவை எடுத்து கொள்ளலாம். வாழைக்காய், கிழங்கு வகைகளும் வேகவைத்து பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்து பின் அந்த மகாபிரசாதத்தை உண்டு விரதத்தை கடைபிடிக்கலாம்.

Leave a Reply