இந்தியில் மீண்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!

இந்தியில் மீண்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அருண் ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஃபர்ஹானா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தற்போது அதே கண்கள் படம் மூலம் பிரபலமான ரோகின் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘மாணிக்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். எண்டேமோல் ஷைன் இந்தியா நிறுவனம் மற்றும் நட்மெக் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் சாம்ராட் சக்கரவர்த்தி இயக்குகிறார்.

‘மாணிக்’ திரைப்படத்தில் சம்யுக்தா சண்முகநாதன், விவேக் பிரசன்னா, குழந்தை நட்சத்திரங்கள் சாய் ஜனனி மற்றும் ஸ்வர் காம்ப்ளே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் உளவியல் திரில்லர் ஜானரில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் நைனிடாலில் தொடங்குகிறது. மேலும், ‘மாணிக்’ திரைப்படத்தை 2023-ஆம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் 2017-ல் ‘டாடி’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply