திமுகவின் இந்த அமைச்சர் பதவியில் நீடிக்கமாட்டார்… அடித்து கூறும் அதிமுக முன்னாள் அமைச்சர்…  

திமுகவின் இந்த அமைச்சர் பதவியில் நீடிக்கமாட்டார்… அடித்து கூறும் அதிமுக முன்னாள் அமைச்சர்…  

சிவகங்கை ;

சிவகங்கை மாவட்ட அதிமுக சார்பில், சிவகங்கை நகர் அரண்மனை வாயில் முன்பாக அதிமுகவின் 51 ஆம் ஆண்டு துவக்க பொன்விழா பொதுக்கூட்டம் நிகழ்ச்சி கட்சியின் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.

 இந்த விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசும்போது, ‘அதிமுகவில் இருந்து சென்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடர்ந்து கப்பம் கட்டி வருவதால் அவர் பதவியில் நீடிக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நீதிமன்ற வழக்கு நீடிப்பதால் அவர் அமைச்சராக தொடர்ந்து நீடிக்க முடியாது’ என்று முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.

 போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தன் மீது பதியப்பட்டுள்ள வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி குறித்து இவ்வாறு கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply