இந்த ஆண்டும் சபரிமலை ஐயப்ப தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்.. பக்தர்கள் அதிர்ச்சி …

இந்த ஆண்டும் சபரிமலை ஐயப்ப தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்.. பக்தர்கள் அதிர்ச்சி …

சபரிமலை ;

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நடைபெறும்.

இந்த பூஜையில் கலந்துகொண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய கேரளா, தமிழகம், ஆந்திராஉள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கார்த்திகை மாத தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது நவம்பர் 16-ம் தேதி மாலையில் திறக்கப்படுகிறது.

இதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்த்து ஏனையவர்களுக்கு இணைய வழி முன்பதிவு கட்டாயம் என கேரள தேவசம்போர்டு நேற்றுமாலை அறிவித்துள்ளது. இந்த ஆன்லைன் முன்பதிவிற்கு கட்டணம் எதுவும் கிடையாது என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் நிலக்கல் உள்ளிட்ட மையங்களில் உடனடி முன்பதிவு செய்யலாம்.

இதற்காக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பக்தர்கள் கொண்டு வரக் கூடாது. பம்பை நதியில் ஆடைகளை வீசக் கூடாது. 15 இருக்கைகளுக்கும் குறைவாக உள்ள சிறிய வாகனங்கள் பம்பை வரை செல்ல அனுமதிக்கப்படும். பம்பையில் பக்தர்களை இறக்கி விட்ட பின்னர் அந்த வாகனங்கள் நிலக்கல்லுக்கு திரும்பி விட வேண்டும் என்று கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction