ஏராள மருத்துவ குணங்கள் கொண்ட திப்பிலி !!

ஏராள மருத்துவ குணங்கள் கொண்ட திப்பிலி !!

திப்பிலி உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றுப் போக்கு, தொழு நோய், இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு மிக சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

திப்பிலிப்பொடியையும் , கடுக்காய்ப்பொடியையும் சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து1/2 டீஸ்பூன் அளவு காலையும் , மாலையும் என தொடர்ந்து இருவேளை உண்டுவந்தால் இளைப்பு நோய் நீங்கும்.


திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை, முப்பிணி நீங்கும்.


திப்பிலியை பொடி 1பங்கும் 2 பங்கு வெல்லம் கலந்து உட்கொள்ள விந்து பெருகும். நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.


சுக்கின் மேல் தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும், பிறகு மிளகு திப்பிலி இரண்டையும் சுத்தம் செய்து இளம் வறுப்பாக தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு ஒவ்வொன்றையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து பின் மூன்றையும் ஒன்றாகக் கலந்து காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை தினமும் 1-2 கிராம் அளவு காலை, மாலை என இருவேளையும் உண்டு வர இருமல்,ஆஸ்துமா, ஜுரம், வயிற்றுவலி, வயிறு உப்பிசம் பசியின்மை தொண்டை வலி மற்றும் தொண்டைப்புண் ஆகியவை குணமாகும்.

Leave a Reply