முதல்வர் குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகர்.. 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார்…

முதல்வர் குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகர்..        9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார்…

சென்னை,

சென்னை திருநின்றவூர் கொட்டம்மேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி(வயது32). இவர் பாஜக பிரமுகர் என்று கூறப்படுகின்றது. இவர் முதல்-அமைச்சர் மற்றும் பட்டியலின சமூகத்தினர் குறித்து ஆபாசமாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார்.

இந்த வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஆவடியில் தலைமறைவாக இருந்த பூபதியை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட பூபதி ஏற்கனவே திமுகவில் உறுப்பினராக இருந்ததும் அதிலிருந்து விலகி தற்போது பாஜகவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. முதல்வர் குறித்தும் பட்டியலினத்தவர்கள் குறித்தும் கொச்சையாக பேசி வீடியோ பதிவிட்ட முன்னாள் திமுக இந்நாள் பாஜக கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply