மக்கள் அமைதி காக்க வேண்டும், வன்முறையை கைவிடுமாறும் – அதிபா் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள்

மக்கள் அமைதி காக்க வேண்டும், வன்முறையை கைவிடுமாறும் – அதிபா் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள்

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு அதிபா் கோத்தபய ராஜபக்சேவின் அரசே காரணம் எனக்கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 

கொழும்புவில் நடைபெற்று வந்த போராட்டமானது வன்முறையாக மாறி நாடு முழுவதும் பரவியது. இதனையடுத்து மக்கள் அமைதி காக்குமாறும் வன்முறையை நிறுத்துமாறும் அதிபா் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருதாகவும், ஒருமித்த கருத்து மூலம் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவதாகவும் அதிபா் அதிபா் கோத்தபய ராஜபக்சே தனது டுவிட்டா் பக்கத்தில் தொிவித்துள்ளாா்.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...