‘வீட்டில் பேசுவது தெலுங்கு… ஆனால் போடுவதோ தமிழ் வேஷம்… அதனால் இந்த தமிழச்சியை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை’… முரசொலிக்கு பதிலடி கொடுத்த தமிழிசை….

புதுச்சேரி:
இதுதொடர்பாக ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் செயல்பாடுகள் குறித்து முரசொலி சிலந்தி கட்டுரையில் விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.
சிலருக்கு மைக் மேனியா இருக்கிறது, தெலங்கானாவில் ஜம்பம் பலிக்காததால் தமிழ்நாட்டைப் பற்றி தமிழிசை கருத்துக்கூறி வருகிறார்.
இந்நிலையில் இதற்கு தமிழிசை பதிலளித்துள்ளார். அதில்,
‘திமுக தங்களை எரிமலைகள் என சொல்லிக்கொள்கிறது. எரிமலைகளால் இமயங்களை ஒன்றும் செய்துவிட முடியாது.
மேலும், சிலந்தி வேடமிட்டு வரும் மூட்டைப்பூச்சிகளே உங்கள் சாயம் வெளுக்கிறது என்ற பயமா? எனவே தான் எதைக் கண்டாலும் தினம் தினமும் அஞ்சும் தெனாலி திரைப்படக்கதாநாயகன் போல் நிழலுக்கும் அஞ்சி, அடிக்கடி ஆளுநரைப் பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுகிறீர்கள்.
சீரியலிலும், சினிமாவிலும் நடித்துவிட்டு பதவியில் அமர்ந்திருப்பவர்களுக்குத்தான் கேமரா மேனியா, மைக் மேனியா உள்ளது. உண்மையை உரக்கச்சொல்லும் எங்களுக்கு மைக் மேனியாவும் இல்லை; கேமரா மேனியாவும் இல்லை. எங்களுக்கு மைக் மேனியா என்பதை விட உங்களுக்குத்தான் மோடி போபியா (மோடி பயம்). எனவே இந்த பயத்தில் குளிர் ஜுரம் வந்து அடிக்கடி என்னைப்பற்றி கட்டுரை வருகிறது. தெலுங்கானாவில் என்ன நடக்கிறது என்பதை ஒழுங்காக முழுமையாகத்தெரிந்து கொண்டுபேசுங்கள் என்றார்.
தெலுங்கை பூர்வீகமாகக்கொண்டு வீட்டில் தெலுங்கு பேசி, தமிழ் வேஷமிடும் தெலுங்கர்களுக்கு, தெலங்கானாவின் ஆளுநராக இருந்தாலும் தெலங்கானா சட்டமன்றத்தில் திருக்குறளை தமிழில் ஒலிக்கச்செய்த முழுமையான தமிழ் ரத்தம் ஓடும் தமிழச்சி நான் என்பதை உங்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
நீங்கள் யார் என்னை தமிழ்நாட்டில் கருத்துக்கூற முடியாது என்று சொல்வது. யார் அந்நியர் நீங்களா? நானா? கடந்த மூன்று ஆண்டுகள் தெலங்கானா உள்ளூர் பத்திரிகைச்செய்திகளை ஆராய்ச்சி செய்து பார்த்தால் யார் நடுங்கிப்போயிருக்கிறார்கள் என்பது தெரியும். அங்கே தெலங்கானா அரசை அலறவிடுவது யார் என்பதும் தெரியும்.
இதன் மூலம் உலகத்தமிழர்களுக்கு காப்புரிமை வாங்கிக்கொண்டதாக தம்பட்டம் கட்டிய, வீர வசனம் பேசிய உங்கள் சாயம் வெளுக்கிறது. முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பை அறிவிக்கிறது.
அங்கே பண்ணை வீட்டில் நடக்கும் வாரிசு அரசியல் ஆட்சியை மக்கள் முன் தோலுரித்துக்காட்டியதால் ஆளுநர் மாளிகை மீது கோபம். தெலங்கானாவில் மூன்று நாள், பாண்டிச்சேரியில் மூன்று நாள் என்று நேரம் ஒதுக்கி வழியில் தமிழ்நாட்டிலும் சில நிகழ்வுகளில் கலந்துகொண்டு பணியாற்றும் என்னை குறை காண வேண்டாம்.
நான் பொதுவெளியில் வைக்கும் வாதங்களுக்குப் பதில் விளக்கம் சொல்ல தெம்பும், திராணியும் அற்றவர்கள் தான் என்னைப் பற்றி கட்டுரை எழுதுகிறார்கள். குருவி தலையில் பனம் பழமா என்று கேட்டிருக்கிறீர்கள்? இலவச பனங்காய்களை தலையில் சூட்டிக்கொள்ளும் வாரிசு குருவிகள் அல்ல நாங்கள். பனை விதைகளாய் மண்ணில் புதைந்து தானே வளர்ந்து உருக்கேறிய பனை மரங்கள் நாங்கள் என்று கூறப்பட்டது.
முரசொலியின் சலசலப்புக்கு அஞ்சமாட்டோம். இடி ஒலியே எங்களை ஒண்ணும் செய்ய முடியாத போது, முரசொலி எங்களை என்ன செய்துவிட முடியும். வதந்திகளை பரப்பும் சிலந்திகள் நசுக்கப்படலாம். உண்மையாக உழைக்கும் சிங்கங்களை ஒன்றும் செய்து விட முடியாது. சிலந்திகள் சிங்கங்களை என்ன செய்துவிட முடியும்” என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
I’ll immediately grasp your rss as I can not in finding your e-mail subscription link or
newsletter service. Do you have any? Kindly permit me recognize so that
I may subscribe. Thanks.