ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமியில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் !!

ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமியில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் !!

ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமியில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகவும் விசேஷமானது.


அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்கு தேவையான சந்திரனின் காரகம் பெற்ற அரிசி வாங்கி கோவிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது 5 பேருக்காவது அன்னதானம் செய்வது புண்ணியமாகும். ஸ்ரீஅன்னபூரணியை வணங்கி வர உணவு வீணாவது குறையும். மேலும் உணவு தட்டுபாடின்றி கிடைக்கும்.

அன்னம் என்பது பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக கருதப்படுகிறது. ஜேவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆக மதிக்கப்படுகிறது. அன்னம் வேறு, ஆண்டவன் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். இதையே சோத்துக்குள்ளே சொக்க நாதர் என்பார்கள்.

ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அரிய வழிபாடு இன்று நடக்கிறது. அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது சிறப்பானதாகும்.

சிவனின் மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம். எனவே அன்று சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் கோடி சிவதரிசனம் செய்த பலன் கிடைக்கும்.

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் சாப்பிட்டால் பலன் நிச்சயம் உண்டு. லிங்கத்தின் மீது சாத்தப்பட்ட அன்னம் மிகவும் வீரியம் மிக்க கதிர்வீச்சு நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம். அன்னாபிஷேக தினமான இன்று சிவனை வணங்கினால் பஞ்சபூ தங்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைப்பதோடு முக்தியும் பெறலாம்.

சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமி ஆகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது.

அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அனைத்து சிவாலயங்களிலும் இன்று மாலை அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

Leave a Reply