ஆஸ்திரேலியாவில் டீக்கடை நடத்தி ரூ.5 கோடி சம்பாதிக்கும் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்!!

ஆஸ்திரேலியாவில் டீக்கடை நடத்தி     ரூ.5 கோடி சம்பாதிக்கும் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்!!

ஆஸ்திரேலியா,
ஆஸ்திரேலியாவில் டீக்கடை வைத்து ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் அதிகமாக சம்பாதித்த இளைஞர் ஒருவர் அறிவுரை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிபிஏ படிக்க சென்றிருந்த நிலையில் திடீரென ஒரு சில காரணங்களால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்

அதன் பிறகு அவர் ஆஸ்திரேலியாவில் டிராப் அவுட் சாய்வாலா என்ற பெயரில் டீக்கடையை தொடங்கினார். இந்த டீக்கடை மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து பல கிளைகள் தொடங்கிய அவர் தற்போது 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாயை ஈட்டி உள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் டீக்கடை வைத்து 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்தாலும் என்னை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு இளைஞர்கள் யாரும் படிப்பை விட்டு விட வேண்டாம் என்றும் படிப்புதான் ஒருவருக்கு மிகப்பெரிய சொத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த சமூக வலைதள பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply