இயக்குனர் ஏ.சற்குணத்துடன் இணைந்த அதர்வா…. மிரட்டும் பட்டத்து அரசன் போஸ்டர்!!

இயக்குனர் ஏ.சற்குணத்துடன் இணைந்த அதர்வா…. மிரட்டும் பட்டத்து அரசன் போஸ்டர்!!

2010-ஆம் ஆண்டு வெளியான ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த ‘பரதேசி’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான ‘குறுதி ஆட்டம்’, ‘டிரிக்கர்’ போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இவர் தற்போது ‘களவாணி’ , ‘வாகை சூடவா’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு ‘பட்டத்து அரசன்’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இது தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Leave a Reply