சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு மதுபோதையில் சரமாரியாக பளார் விட்ட டாக்டர் …அதிர்ச்சி வீடியோ …

சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு மதுபோதையில் சரமாரியாக பளார் விட்ட டாக்டர் …அதிர்ச்சி வீடியோ …

சத்தீஸ்கர்;

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்திற்குட்பட்ட கெர்வானி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம் குமார். இவரது தாயார் சுக்மதி. இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனே ஷியாம் குமார் தாயாரை ஆட்டோவில் கோர்பாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மருத்துவர் ஒருவர் சுக்மதிக்கு சிகிச்சை செய்துள்ளார். பிறகு திடீரென மருத்துவர் அவரை அடித்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஷியாம் குமார் மருத்துவரைத் தடுத்து தனது தாயாரைக் காப்பாற்றியுள்ளார். அப்போது மருத்துவர் அவரிடம் நீ அமைதியாக இரு என ஆவேசமாகப் பேசியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மருத்துவரிடம் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக போலிஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவர் பணியில் இருந்தபோது குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply