கழுத்தில் பாய்ந்த துப்பாக்கி தோட்டாவோடு 80 ஆண்டுகளாக உயிர் வாழும் தாத்தா…எக்ஸ்ரே எடுத்து பார்த்த டாக்டர்கள் வியப்பு ..

கழுத்தில் பாய்ந்த துப்பாக்கி தோட்டாவோடு  80 ஆண்டுகளாக உயிர் வாழும் தாத்தா…எக்ஸ்ரே எடுத்து பார்த்த டாக்டர்கள் வியப்பு ..

சீனா;

சீனாவில் போர் வீரர் ஒருவர் சுமார் 80 ஆண்டுகளாக தனது கழுத்தில் துப்பாக்கி குண்டை சுமந்துக்கொண்டு இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் ஷான்டாங்கில் உள்ள உள்ளூர் மருத்துவமனையின் மருத்துவர்கள், 95 வயதான ஜாவோ ஹீ என்பவரின் கழுத்தை எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர்.

அப்போது அவரது கழுத்தில் துப்பாக்கி தோட்டா இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் அதிசயம் என்னவென்றால் தனது கழுத்தில் தோட்டா இருப்பது ஜாவோ ஹீக்கே தெரியாது என்பது தான்.

80 ஆண்டுகளாக அவரது கழுத்தில் துப்பாக்கி தோட்டா சிக்கியிருந்த போதிலும், அது ஜாவோவுக்கு எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் போர் வீரரான ஜாவோவுக்கு ஏற்பட்ட இந்த காயம் கவனிக்கப்படாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக ஜாவோ சீன ராணுவத்தில் சேர்ந்தார். அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக வட கொரியாவின் பக்கம் 1950களில் நடந்த கொரியப் போர் உட்பட இரண்டு போர்களின் பங்கேற்றார். ஓய்வுக்குப் பிறகு, ஜாவோ உள்ளூர் தொழிற்சாலைகளில் பணிபுரிந்தார்.

இந்த நிலையில் தனது கழுத்தில் தோட்டா இருப்பது பற்றி ஜாவோ கூறுகையில், இத்தனை ஆண்டுகளாக நான் ஆரோக்கியமாக தான் இருக்கிறேன் என்று ஜாவோ கூறினார். இதை அடுத்து அவரது கழுத்தில் சுமார் 80 ஆண்டுகளாக இருந்த துப்பாக்கி தோட்டா அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

Leave a Reply