தன் மாமியாருடன் வயல்வெளியில் வெங்காயம் விதைக்கும் ஜெர்மனி மருமகள்…!

தன் மாமியாருடன் வயல்வெளியில் வெங்காயம் விதைக்கும் ஜெர்மனி மருமகள்…!

திருமணத்துக்குப் பின் கிட்டத்தட்ட இந்தியப் பெண்ணை போலவே மாறியுள்ள ஜூலி, தன் மாமியாருடன் வயல்வெளியில் வெங்காயம் விதைக்கும் க்யூட்டான வீடியோவைப் பகிர்ந்து நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளார்.

உலகில் சாதி, மதம், நிறம், பாலினம், மொழி என அனைத்தையும் தகர்த்து மனித சமூகம் தொடர்ந்து இயங்கி தழைத்தோங்க வித்திடும் சிறந்த திறவுகோல் காதல். அதிலும் பல வேறுபாடுகளைக் கடந்து திருமணத்தில் முடியும் காதல்களை மக்கள் என்றுமே கொண்டாடத் தயங்குவதில்லை.

அந்த வகையில் நாடு, மொழி, நிற வேறுபாடுகளைக் கடந்து இந்தியர் ஒருவரை காதல் திருமணம் செய்த ஜெர்மனி பெண் ஒருவரின் இன்ஸ்டா பக்கம் நெட்டிசன்களை ஈர்த்து லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
ஜூலி ஷர்மா என்ற இந்தப் பெண், அர்ஜூன் எனும் இந்தியரை மணந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெய்ப்பூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், தான் தன் கணவரை சந்தித்தது முதல், இந்தியாவுடனான தன் பிணைப்பு, கணவரின் குடும்பத்தார், மாமியார் உடனான உறவு என தன் வாழ்வின் சிறந்த பக்கங்கள் அனைத்தையும் பகிர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறார்.

திருமணத்துக்குப் பின் கிட்டத்தட்ட இந்தியப் பெண்ணை போலவே மாறியுள்ள ஜூலி, முன்னதாக தன் மாமியாருடன் வயல்வெளியில் வெங்காயம் விதைக்கும் க்யூட்டான வீடியோவைப் பகிர்ந்து நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளார்.

”நான் குடும்பத்துடன் எளிமையான வாழ்க்கையை மிகவும் ரசிக்கிறேன்! நான் ஏற்கனவே ஒரு மாதமாக எனது கணவரின் கிராமத்தில் தங்கியிருக்கிறேன், குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாகவும் இயற்கையுடன் மிகவும் நெருக்கமாகவும் வாழ்கிறேன்” என நெகிழ்ந்து இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ 30.1 மில்லியன் பார்வையாளர்களையும், 2.3 மில்லியன் லைக்குகளையும் பெற்று இன்ஸ்டாகிராமில் ஹிட் அடித்து வருகிறது.

இந்நிலையில், ஜெர்மனியில் பிறந்து வளர்ந்த ஜூலி, புதிய கலாச்சாரத்திற்கு பழகி எளிமையாக வாழ்ந்து வருவதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply