“குழந்தைகள் தினம்” கொண்டாட காரணம் என்ன? அதை விளக்கும் வரலாறு..!!

“குழந்தைகள் தினம்” கொண்டாட காரணம் என்ன? அதை விளக்கும் வரலாறு..!!

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என பாரதி கனவு கண்ட புதுமை பெண்களாக இன்று பெண்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், கொலை, குழந்தை திருமணம் போன்ற அடக்குமுறையில் அரங்கேற்றப்பட்டு தான் வருகின்றன. இதுபோன்ற வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்தின் உருவான வரலாறு மற்றும் இதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக காணலாம்…

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் என்றால் என்ன? ஆண்டுதோறும் அக்டோபர் 11ம் தேதி அன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அனுசகரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுக்க ஊக்குவிக்கிறது.மார்ச் 8 அன்று கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினம், பருவ வயதுப் பெண்களுக்கான அதிக வாய்ப்புகளைத் திறப்பதை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் முக்கியத்துவம், சக்தி மற்றும் திறனை உணரவைக்கிறது.

அதேபோல் அக்டோபர் 11ம் தேதி கொண்டாடடப்படும் சர்வதேச பெண் குழந்தைகளின் தினம், குழந்தை திருமணங்கள், மோசமான கற்றல் வாய்ப்புகள், வன்முறை மற்றும் பாகுபாடு உட்பட, உலகம் முழுவதும் சிறுமிகள் எதிர்கொள்ளும் பாலின அடிப்படையிலான சவால்களை அகற்றுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள் ஆகியன நடத்தப்படுகின்றன.ஒவ்வொரு பத்தில் ஒரு ஆண் குழந்தையுடன் ஒப்பிடும்போது நான்கு பெண் குழந்தைகள் கல்வி, வேலை, சுய தொழில் பயிற்சி போன்ற அனைத்து விஷயங்களும் மறுக்கப்படுவதாக உலகளாவிய புள்ளிவிவரப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச பெண் குழந்தைகள் தின வரலாறு:

டிசம்பர் 19, 2011 முதல், இந்த நாள் “சர்வதேச பெண் குழந்தைகளின் தினம்” அல்லது “சர்வதேச பெண்கள் தினம்” என்று கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், அக்டோபர் 11-ம் தேதியை சிறுமிகளை கௌரவிக்கும் நாளாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்காக முதன்முதலில் 1995 ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த உலக பெண்கள் மாநாட்டில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடுவது தொடர்பாக பிரகடனம் செய்யப்பட்டது. உலக வரலாற்றில், உலகெங்கிலும் உள்ள இளம்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தைக் கண்டறிந்த முதல் மாநாடு இதுவாகும்.

2007ம் ஆண்டு சர்வதேச, அரசு சாரா நிறுவனமான பிளான் இன்டர்நேஷனல் (Plan International) அமைப்பு முதன் முறையாக “நான் ஒரு பெண் என்பதால்” என்ற சர்வதேச பெண் குழந்தை தின பிரச்சாரத்தை முன்னெடுக்க தொடங்கியது. இது உலகளவில் மற்றும் குறிப்பாக நிலைமைகள் மோசமாக இருக்கும் வளரும் நாடுகளில் பெண் குழந்தைகளை வளர்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை பரப்பியது.

வளரும் நாடுகளில், பெண் குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்தவும், அவர்களை வறுமையிலிருந்து வெளியே கொண்டு வரவும் சர்வதேச பெண் குழந்தை தினத்தில் பிரச்சாரத்தின் போது ஒரு யோசனையாக பிறந்தது மற்றும் அதன் பிரதிநிதிகள் இதனை ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்தனர்.

1995 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த உலக மகளிர் மாநாட்டில், பெண்கள் உரிமைகளை ஆதரிப்பதற்கும் சர்வதேச அளவில் இளம் பெண்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்குமான செயல் திட்டத்தை பல்வேறு நாடுகள் ஏற்றுக்கொண்டன. ப்ளான் இன்டர்நேஷனல் மற்றும் பிற அமைப்புகளின் முன்முயற்சியால், பெண்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்கு ஆதரவாக குரல் எழுப்பியது, இது அதிக ஈர்ப்பைப் பெற்றது.

பின்னர் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தீர்மானமாக நிறைவேற்ற கனடாவினால் முறையாக முன்மொழியப்பட்டது. இதன் விளைவாக, டிசம்பர் 19, 2011 அன்று, யு.என். பொதுச் சபை அக்டோபர் 11, 2012 ஐ சர்வதேச பெண் குழந்தை தினத்தின் தொடக்க நாளாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டது, இது குறிப்பாக குழந்தை திருமணங்களின் கடுமையான பிரச்சினையை மையமாகக் கொண்டது.

ஒவ்வொரு ஆண்டும், இந்த நாள் ஒரு தனித்துவமான கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது.விழிப்புணர்வு பிரச்சாரங்கள்:ஆரம்பத்தில் குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஆன்லைன் மூலம் பெண்கள் அனுபவித்து வரும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆண்களைப் போலவே பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான பெண் குழந்தைகளின் உண்மையான அதிகாரமளிப்பை அதன் தீர்ப்பு அழகாக விவரிக்கிறது. பெண்கள் தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் முடிவுகளில் அர்த்தமுள்ள பங்கேற்பு, பாகுபாடு மற்றும் வன்முறையின் சுழற்சியை உடைப்பதற்கும், இளம் பெண்களை உற்சாகமான, சுதந்திரமான பெண்களாக மாற்றுவதற்கான அங்கீகாரத்தை அளிப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply