ஹரியானாவில் பாரம்பரிய முறைப்படி செல்லப் பிராணிகளுக்கு திருமணம்!!

ஹரியானாவில் பாரம்பரிய முறைப்படி செல்லப் பிராணிகளுக்கு திருமணம்!!

ஹரியானா:

வளர்ப்பு நாய்கள் நன்றியுள்ள ஜீவன்களாக பார்க்கப்படுகிறது. ஆனால் கோபத்தில் யாரையாவது திட்டும்போது ’போடா நாயே’…என்று சொல்வது பலரது வாடிக்கையாக உள்ளது.

இன்றளவும் கூட பணக்காரர்கள் வீட்டு ஏசி அறையிலும், ஏழை வீட்டு கொட்டையிலும் செல்லப் பிராணிகள் வீட்டில் ஒரு உறுப்பினராக நாய்கள் இருந்து வருகிறது. அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே நாய்களை பார்க்கின்றனர். செல்லப்பிராணிகளுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கும் இடையிலான பிணைப்பு உண்மையில் விலைமதிப்பற்றது.

அவர்கள் செல்லப்பிராணிகள் மீது வைத்திருக்கும் பாசம் அளவு கடந்தது. அவர்கள் சாப்பிட்ட உணவு உட்பட அனைத்தும் அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கும் பகிர்வர். வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்காக ஒரு பெயரை வைத்து அன்போடு அழைப்பது அழகானதாக இருக்கும்.

இந்நிலையில் இன்று செல்லப்பிராணிகளான நாய்களுக்கு திருமணம் நடைபெற்றது. அரியானா மாநிலம் குருகிராம் நகரில் பாலம் விகார் விரிவாக்க பகுதியில் அமைந்த ஜிலே சிங் காலனியில் அண்டை வீடுகளில் வசித்து வருபவர்கள் மணிதா மற்றும் சவிதா. மணிதா செல்லப் பிராணியாக ஷெரு என்ற பெயரிடப்பட்ட ஆண் நாயை 8 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.

இவரது வீட்டுக்கு அருகே வசிப்பவர் சவிதா என்ற ராணி. இவர் செல்ல பிராணியாக ஸ்வீட்டி என்ற பெயரிடப்பட்ட பெண் நாயை வளர்த்து வருகிறார்.

இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாக நெருங்கிய உறவினர்கள் பழகி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் தங்களது செல்ல பிராணிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதன்படி 100 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளர். திருமண பத்திரைகளுக்கான 25 அட்டைகளை அச்சிட்டு உள்ளனர். மற்றவர்களை ஆன்லைன் வழியே அழைத்து உள்ளனர். இந்த திருமணமானது கோலகளமாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டர்.

இது குறித்து சவிதா கூறும்போது, “நான் செல்ல பிராணிகள் வளர்ப்பதில் பிரியம் உள்ளவள். எனது கணவரும், நானும் செல்ல பிராணிகளை பராமரித்து வருகிறோம். எனக்கு குழந்தை இல்லை. அதனால் ஸ்வீட்டியை நாங்கள் குழந்தையாக வளர்த்து வருகிறோம்” என்றார்.

ஆண் நாயான ஷேருவின் உரிமையாளர் மனிதா கூறுகையில், “கடந்த எட்டு வருடங்களாக நாங்கள் ஷெருவுடன் ஒன்றாக இருக்கிறோம். நாங்கள் அவரை எப்போதும் எங்கள் குழந்தையாகவே நடத்துகிறோம்.

எங்கள் நாய்களுக்கு திருமணம் செய்வது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் சாதாரணமாக கருத்து கேட்டோம். சிலருக்கு இது பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. நாங்கள் இருவரும் எங்களது செல்லப் பிராணிகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தோம்” என்றார்.

செல்லப்பிராணிகளுக்கான திருமணம் பாரம்பரிய முறைப்படி நாய்களுக்கு மாலை அணிவித்து சடங்குகள் நடத்தப்பட்டன. அந்த நாய்களுக்கு சிவப்பு நிற உடை அணிந்தும், அலகாரப் பொருட்களான லிப்ஸ்டீக், மை, கொலுசு போன்ற பொருட்களை நாய்களுக்கு பயன்படுத்தி அலங்காரப்படுத்தினர்.

கொட்டும் மேளங்களும் முழங்கின. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நடனம் ஆடி மகிழ்ந்தனர். அந்த பகுதியை கோலாகலமுடன் காணப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply