20 ஓவர் உலக கோப்பை போட்டி: உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு 13.84 கோடி பரிசு!!

20 ஓவர் உலக கோப்பை போட்டி:          உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு 13.84 கோடி பரிசு!!

20 ஓவர் உலக கோப்பையை போட்டிகளில் மொத்த 16 நாடுகள் பெங்கு பெற்றது அந்த அணிகள் பெற்ற பரிசுத்தொகை முழு விவரம் புதுடெல்லி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

உலகக் கோப்பையை வென்ற ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் இங்கிலாந்து அணிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு பரிசு தொகையாக ரூ.13.84 கோடி வழங்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி ரூ.7.40 கோடியை பரிசாக பெறுகிறது. அதே சமயம் அரை இறுதியில் தோல்வி அடைந்த மற்ற அணிகளுக்கு ரூ.4.19 கோடி பரிசாக வழங்கப்படுகிறது.

இதில் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி நியூசிலாந்தை விட கூடுதலாக ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால், இந்திய அணிக்கு ரூ.4.50 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருபது ஓவர் உலக கோபை போட்டியில் பங்கு பெற்ற அணிகள் பெற்ற பரிசு தொகை விவரம் வருமாறு:-

இங்கிலாந்து ரூ.13.84 கோடி பாகிஸ்தான் ரூ.7.40 கோடி இந்தியா ரூ.4.50 கோடி நியூசிலாந்து ரூ.4.19 கோடி ஆஸ்திரேலியா ரூ.1.53 கோடி தென்னாப்பிரிக்கா ரூ.1.20 கோடி வங்காள தேசம் ரூ.1.20 கோடி இலங்கை ரூ.1.85 கோடி ஆப்கானிஸ்தான் ரூ.56.35 லட்சம் நெதர்லாந்து ரூ.1.85 கோடி ஜிம்பாப்வே ரூ.88.50 லட்சம் அயர்லாந்து ரூ.1.53 கோடி வெஸ்ட் இண்டீஸ் ரூ.64.40 லட்சம் ஸ்காட்லாந்து ரூ.64.40 லட்சம் நமீபியா ரூ.64.40 லட்சம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரூ.64.40 லட்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction