1 வாரம் தான் கெடு.. வேலைகள் நடக்கலைன்னா பிரம்மாண்ட அளவில உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன்.. கோவையில் எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

1 வாரம் தான் கெடு.. வேலைகள் நடக்கலைன்னா பிரம்மாண்ட அளவில உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன்.. கோவையில் எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

கோவை;

முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி அவரது தொகுதியான குனியமுத்தூர் 87ஆவது வார்டு பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

‘குனியமுத்தூர் 87, 88 ஆகிய வார்டுகளில் மழை நீர் தேங்கியுள்ளது. கோவையில் 20 நாள்களாக தொடர் மழை பெய்தது. இப்பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க பாதாளச் சாக்கடை கொண்டுவரத் திட்டம் இருந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் போடப்பட்ட பாதாளச் சாக்கடை டெண்டர் ரத்து செய்யப்பட்டதே தற்போது மழை நீர் தேங்கி நிற்கக் காரணம்.

அதிமுக ஆட்சியில் மழை நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாதிப்புகளை பார்வையிடுவது குறித்து மாநகராட்சி ஆணையர், ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தேன். ஆனால், ஒரு அதிகாரியும் வரவில்லை.

இதனால் இப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சிரமப்படுகின்றனர். இனியாவது சரி செய்யுங்கள். அதிகாரிகள், மக்களை பார்த்து வேலை செய்யுங்கள். கோவையைப் பொறுத்தவரை எந்த சாலையிலும் நடக்க முடியவில்லை. எல்லா சாலைகளும் மோசமாக உள்ளது. அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட
500 சாலை பணிகளை ரத்து செய்துள்ளார்கள். அரசு நிதி இல்லை என சொல்லக்கூடாது.

சென்னையில் இதுவரை நாங்கள் செய்த வேலையைத் தவிர, வேறு எதுவும் செய்யப்படவில்லை. கோவை மாவட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒரு வாரம் கெடு. பணிகளை செய்யவில்லை எனில், மிகப்பெரிய உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும். நாங்கள் செய்த பணிகள் மக்களுக்குத் தெரியும்.

தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் சொன்னதுபோல மக்கள் பாராட்டவில்லை.
வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கூட்டணி கட்சிகளே வேறு வழியில்லாமல் இருக்கிறார்கள். சென்னையில் மழைநீர் தேங்காததற்கு நாங்கள் செய்த பணிகளே காரணம். மழைநீர் வடிகால் நாங்கள் கட்டியது.

தற்போது லேசான மழைக்கே சென்னை தாங்கவில்லை. தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து நடிக்காமல் வேலை செய்யுங்கள்’ எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction