அரசாங்க பணியில் நான் தலையிட்டேன் என்பதற்கு ஒரு உதாரணம் காட்டுங்கள்… அந்த நிமிடமே பதவியை ராஜினாமா செய்கிறேன்.. கேரள கவர்னர் சவால்…

அரசாங்க பணியில் நான் தலையிட்டேன் என்பதற்கு ஒரு உதாரணம் காட்டுங்கள்… அந்த நிமிடமே பதவியை ராஜினாமா செய்கிறேன்.. கேரள கவர்னர் சவால்…

டெல்லி ;

அரசாங்க பணியில் நான் தலையிட முயன்றதற்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள், அந்த நிமிடமே கவர்னர் பதவியை நான் ராஜினாமா செய்து விடுவேன் என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார். 

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தற்போது டெல்லியில் உள்ளார். அங்கு ஆரிப் முகமது கான் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கவர்னர் ஆரிப் முகமது கான் பேசுகையில் கூறியதாவது: பல்கலைக்கழகங்களை நடத்துவது வேந்தரிடம் உள்ளது.

அரசாங்கத்தை நடத்துவது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் உள்ளது. அரசாங்க பணியில் நான் தலையிட முயன்றதற்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள், அந்த நிமிடமே கவர்னர் பதவியை நான் ராஜினாமா செய்து விடுவேன்.

தினந்தோறும் பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டில் அவர்கள் (பினராயி விஜயன் தலைமையிலான அரசு) தலையிட்டதற்கு 1,001 உதாரணங்களை என்னால் கொடுக்க முடியும். நான் இந்த விஷயங்களை (கவர்னர் மாளிகைக்கு வெளியே நடத்த போராட்டங்கள்) சமாளிக்கப் போவதில்லை.

ஆனால் நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல முடியும், நான் அழுத்தம் கொடுக்கக்கூடிய நபர் அல்ல என்ற முடிவுக்கு வர உங்களுக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் ஜனநாயக உரிமை உண்டு. நாம் ஜனநாயகத்தில் இருக்கிறோம், அனைவரும் தங்கள் ஜனநாயக உரிமைகளை பயன்படுத்த முடியும். சட்டம் மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்துவது எனது கடமை,

எந்த அச்சுறுத்தலும் சட்டத்தை நிலைநிறுத்துவதில் இருந்து என்னை தடுக்க முடியாது. நீதித்துறையில் இருந்து வரும் உத்தரவுகள் அல்லது தீர்ப்புகளை மதித்து, ஏற்றுக்கொண்டு செயல்படுவது எனது கடமை என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.

நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக மாநில முதல்வருக்கு (பினராயி விஜயன்) கடிதம் எழுதியுள்ளேன், விளக்கம் கேட்டுள்ளேன். தாங்கள் செய்வது சட்டப்படி இல்லை என்று அவர்களுக்கே (பினராயி விஜயன் தலைமையிலான அரசு) தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction