ஒன் வேயில் சென்றதற்காக ஏடிஜிபியின் வாகனத்திற்கு ரூ.500 அபராதம் விதித்த சென்னை போலீஸ் …

ஒன் வேயில் சென்றதற்காக  ஏடிஜிபியின் வாகனத்திற்கு ரூ.500 அபராதம் விதித்த சென்னை போலீஸ் …

சென்னை,

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஏடிஜிபியின் வாகனத்திற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஏடிஜிபியின் வாகனம் ஒருவழிப்பாதையில் எதிர்திசையில் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளம் மூலம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.அபராதம் விதிக்கப்பட்டது குறித்து சமூக வலைதளத்திலேயே போலீசார் பதிலளித்துள்ளனர்.

இருப்பினும் அந்த வாகனத்தில் ஏடிஜிபி இல்லை எனவும், காவலர் இயக்கியதாகவும் கூறப்படுகிறது.

ஏடிஜிபியின் வாகனம் என்றால் ஒருவழிப்பாதையில் செல்லலாமா என்று ஒரு தரப்பு மக்களும் ஏடிஜிபியின் வாகனம் என்றாலும் ஒரு வழிப்பாதையில் சென்றதற்காக அபராதம் விதித்த போலீசாரின் நடவடிக்கையை பாராட்டுவதாகவும் ஒரு தரப்பு மக்கள் பேசி வருகின்றனர் .

Leave a Reply