கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகளில் எனக்கு திருப்தி இல்லை…. போட்டுடைத்த தமிழக அமைச்சர் …

கூட்டுறவுத்துறையின்  செயல்பாடுகளில் எனக்கு திருப்தி இல்லை…. போட்டுடைத்த தமிழக அமைச்சர் …

மதுரை,

கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகளில் தனக்கு திருப்தியில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவு சங்கங்கள் முழுமையான கணிணி மயமாக்காமல் இருப்பதால் பல பிழைகள் நடைபெறுவதாக தெரிவித்தார்.

நடமாடும் ரேசன்கடைகள் உரிய நேரத்திற்கு செல்வதில்லை என்ற அவர், கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகளில் நிதியமைச்சராக தனக்கு திருப்தி இல்லை என்றும் கூறினார்.

கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை என கூட்டுறவு துறையினர் முன்னிலையில் தமிழக நிதி அமைச்சர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

One thought on “கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகளில் எனக்கு திருப்தி இல்லை…. போட்டுடைத்த தமிழக அமைச்சர் …

  1. உண்மை சொல்லி திருந்த நல்ல தகவல் இதில் கோவப்பட்டால் ஒரு துறையை இழப்பதற்கு சமம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction