ஏப்ரல் மாதம் ”ஜெயிலர் ” வெளியிட படக்குழு திட்டம்!!

ஏப்ரல் மாதம் ”ஜெயிலர் ” வெளியிட படக்குழு திட்டம்!!

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்ததையடுத்து படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘ஜெயிலர்’ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் இடம்பெறும் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதற்கு முன்பு சிவராஜ்குமார் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply