13 கோடிக்கு மருந்துகள் வாங்க ரூ. 40 கோடிக்கு போலி ஆவணங்கள் தயாரித்த முன்னாள் மருத்துவ அதிகாரிகள் 4 பேர் மீது வழக்குப்பதிவு..

13 கோடிக்கு மருந்துகள் வாங்க ரூ. 40 கோடிக்கு போலி ஆவணங்கள் தயாரித்த   முன்னாள் மருத்துவ அதிகாரிகள் 4 பேர் மீது வழக்குப்பதிவு..

சென்னை ;

தேவைக்கு அதிகமாக மருந்து வாங்கி, காலாவதியாக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய மருத்துவ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

மதுரை மண்டலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு  தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி, காலாவதியாக்கி, அரசுக்கு ₹27.16 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.  இந்த புகாரின் பேரில்,  4 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, முன்னாள் கிராம சுகாதார சேவை இயக்குநர் இன்பசேகரன், மதுரை மண்டல மருத்துவ அதிகாரி ஜான் ஆண்ட்ரூ, கண்காணிப்பாளர்கள் அசோக் குமார், அமர்நாத் ஆகிய 4 அதிகாரிகள்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்,  ரூ. 13 கோடிக்கு மருந்துகள் வாங்க ரூ. 40 கோடிக்கு போலி ஆவணங்கள் தயாரித்ததும் அம்பலமாகியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction