விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப் படத்தின் புதிய அப்டேட் கொடுத்த படக்குழு!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வாரிசு படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.