எலும்பை வலிமையாக வைத்திருக்க உதவும் எருமைப்பால்!!

எலும்பை வலிமையாக வைத்திருக்க உதவும் எருமைப்பால்!!

பசுவின் பாலுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் அதிகம் உட்கொள்ள படக்கூடிய பால் எருமை பால். இந்தியாவும், சீனாவும் உலக அளவில் 80% எருமைப் பாலை உற்பத்தி செய்கிறது. அதைத்தொடர்ந்து சீனா, எகிப்து மற்றும் நேபாளம் அதிக அளவு எருமைப் பாலை உற்பத்தி செய்கிறது.

பசுவின் பாலை போலவே எருமைப்பாலில் அதிக ஊட்டச் சத்து அடங்கியுள்ளது. மிக முக்கியமாக வெண்ணை, தயிர், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம் போன்ற பால் பொருள்களை தயாரிக்க எருமைப்பால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எருமைப் பாலில் அதிக அளவு புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ காணப்படுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது எருமைப்பால். எருமைப் பாலில் கால்சியம் அதிகமாக உள்ளது. கால்சியம் இரத்த நாளங்களை மீள்தன்மையுடன் வைத்திருப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்த அபாயத்தை தடுக்க உதவுகிறது. இது சீரான ரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. மற்ற பால் வகைகளை ஒப்பிடும் பொழுது எருமைப்பாலில் கொலஸ்ட்ரால் குறைவு. இது உங்களுடைய இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது.

எருமைப்பால் எலும்பை வலிமையாக வைத்திருக்க உதவுகிறது. இதில் கால்சியம் அதிக அளவு உள்ளது. மேலும் எருமைப்பாலில் தாமிரம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற தாதுக்களும் நிறைந்து உள்ளது. இது நம்முடைய எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. பசும்பாலை விட எருமைப்பாலில் அதிக அளவு கால்சியம் உள்ளது. ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டுவலி போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க இது உதவும்.

இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது எருமைப்பால். இதில் பொட்டாசியம் காணப்படுகிறது. இது ரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை விரிவுபடுத்துகிறது. மேலும் இரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது.
…..

Leave a Reply