உங்களுடைய உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை அகற்றி உடல் எடையை குறைக்க உதவும் ஜூஸ் கலமன்சி!!

உங்களுடைய உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை அகற்றி உடல் எடையை குறைக்க உதவும் ஜூஸ் கலமன்சி!!

கலமன்சி சிறிய அளவில் எலுமிச்சை போல காணப்படக்கூடிய ஒரு பழம். இது கலமண்டின், பிலிப்பைன் எலுமிச்சை, கோல்டன் லைம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பழம் முக்கியமாக பிலிப்பைன்ஸில் அதிகளவு பயிரிடப்படுகிறது.

இந்த பழம் இயற்கையாகவே நல்ல புளிப்பு சுவை கொண்டது. பாரம்பரிய பிலிப்பினோ உணவு வகைகளில் கலமன்சி பயன்படுத்தப்படுகிறது. இப்பொழுது நம்முடைய ஊர்களிலும் அதிகம் இது காணப்படுகிறது.

இதை இங்கு குட்டி ஆரஞ்சு எனக்கு சொல்கிறார்கள். இந்த ஜூஸை தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய உடலில் இருக்கக்கூடிய நச்சுக்கள் விரைவில் வெளியேறும்.

இந்த பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், லிமோனின், பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது, சருமத்தை அழகாக்குகிறது, கொழுப்பை குறைக்கிறது, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது, நோய்த்தொற்றுகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

இந்தப் பழம் உங்களுடைய சருமத்தை அழகாக்க கூடியது. இதில் இருக்கக்கூடிய அமில உள்ளடக்கம் உங்களுடைய முகம் மற்றும் உடலில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், முகப்பரு வடுக்கள் போன்றவற்றை நீக்கும் குணம் கொண்டது. இதில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உங்களுடைய சரும செல்களை புத்துயிர் பெற செய்கிறது. தோலின் நிறத்தை அதிகரிக்கிறது. உடலில் இருக்கக்கூடிய சுருக்கங்களைப் போக்குகிறது.

இந்தப்பழம் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது நம்முடைய உடல் முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு வகையான திசுக்களை இணைக்கும் முக்கிய கட்டமைப்பு கொண்ட புரதம்.

இந்த பழத்தில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது. இது வைரஸ்களை எதிர்த்து போராடும் குணம் கொண்டது. இந்த பழத்தில் இருக்கக்கூடிய சிட்ரிக் அமிலம் உங்களுடைய சுவாச அமைப்பில் இருக்கக்கூடிய சளியை வெளியேற்றுகிறது. மேலும் இது சுவாசக்குழாய் மற்றும் தொண்டையில் ஏற்படக்கூடிய வீக்கங்களை குறைக்கவும் உதவுகிறது.

இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ், இன்சுலின், கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. இந்தப்பழம் உங்களுடைய உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. மிக முக்கியமாக சிறுநீரகங்கள், பெருங்குடல், கல்லீரல், பித்தப்பை போன்ற உறுப்புகளில் இருக்கக்கூடிய நச்சுக்களை நீக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது இந்த பழம். இந்த பழ ஜூஸை தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை அகற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த பழச்சாறை நீங்கள் தொடர்ந்து குடித்து வரும் பொழுது உங்களுடைய குடல் இயக்கம் அதிகரிக்கிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்களுக்கு அந்த பிரச்சினை குறையும்.

உடலில் ஏற்படக்கூடிய துர்நாற்றத்தைப் போக்க கூடியது இந்த பழச்சாறு. தொடர்ந்து இந்த பழச்சாறை நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களுடைய உடலில் ஏற்படக்கூடிய துர்நாற்றம் நீங்கும். உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது பாக்டீரியாக்கள். இந்த சாற்றில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் உடலில் நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாவை அகற்ற உதவுகிறது.

அதுபோல குளிக்கும்போது இந்த பழச்சாறு கலந்த தண்ணீரை நீங்கள் குளிக்கும் பொழுது உங்களுடைய உடலில் இருக்கக்கூடிய கெட்ட துர்நாற்றம் எல்லாம் நீங்கி உடல் நல்ல நறுமணத்தோடு இருக்கும்.

இந்த பழச்சாறு தொடர்ந்து குடித்து வரும்பொழுது நீரிழிவு நோய் குறையும். இது உடலில் குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. அதுபோல இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஆகையால் நீரிழிவு நோய் பிரச்சினை இருப்பவர்கள் தொடர்ந்து இந்த பழச்சாற்றை குடித்து வரும்போது இந்த பிரச்சனை நீங்கும்.

Leave a Reply