37 வயதை நெருங்கினாலும் இளமை குறையாத செரின்!..

37 வயதை நெருங்கினாலும் இளமை குறையாத செரின்!..

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷெரின். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட ஷெரின் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் ஷெரின். துள்ளுவதோ இளமை படத்தில் பருவ மாற்றம் குறித்து தன் நடிப்பின் மூலம் அழகாக காட்டியிருப்பார்.

அதனையடுத்து விசில் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் மெயில் வில்லியாக நடித்து அனைவரின் கவனத்தை பெற்றார். அதிலும் குறிப்பாக அந்த படத்தில் அமைந்த ‘அழகிய அசுரா அழகிய அசுரா’ பாடலில் அவர் ஆடிய கவர்ச்சி நடனம் இன்று வரை நம் நியாபகத்திற்கு வந்து போகும்.

ஆனால் திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதன் பின் தான் விஜய் டிவி ஷெரினை அழைக்க காத்திருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் அன்பை பெற்றார்.

கடைசி வரை நின்று விளையாடினார் ஷெரின். பிக்பாஸை தொடர்ந்தாவது சினிமாவில் வாய்ப்புகள் வருமா என்று எதிர்பார்த்த நிலையில் இன்று வரை எந்த படத்திலும் அவர் நடித்ததாக தெரியவில்லை.

இதனால் சமூக வலைதள பக்கங்களில் மற்ற நடிகைகளைப் போல இவரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். 37 வயதை நெருங்கினாலும் இன்னும் அந்த இளமை குறையாத ஷெரினின் அழகிய புகைப்படங்களை இணையத்தை அலங்கரித்து கொண்டிருக்கின்றன.

Leave a Reply