அருணாசலேஸ்வரர் கோவிலில் 27-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா !!

அருணாசலேஸ்வரர் கோவிலில்              27-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா !!

உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஈசான்யா மைதானம், காந்திநகர் பைபாஸ் பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

மேலும் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவிலில் கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது.

இதையொட்டி விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விழா நாட்களில் சாமி வீதி உலா செல்லும் வெள்ளி வாகனங்கள் சுத்தம் செய்யப்பட்டு, ‘பாலீஷ்’ போடும் பணியும், கோவிலை சுற்றி வண்ண விளக்குகள் பொறுத்தும் பணியும் நடந்து வருகின்றது.

மேலும் மதுரையை சேர்ந்த சிவனடியார்கள் உழவார பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரம், பலி பீடம் மற்றும் விளக்குகளை சுத்தம் செய்தனர்.

Leave a Reply