போலீசார் கண் முன்னிலையில் குற்றவாளிக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபர் …காட்டிகொடுத்த செல்போன் பதிவு ….

போலீசார் கண் முன்னிலையில்  குற்றவாளிக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபர் …காட்டிகொடுத்த செல்போன் பதிவு ….

மதுரை;

மதுரையில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் இருக்கும்போதே இளைஞர் ஒருவர் கஞ்சாவை வழங்கிய நிகழ்வு நடந்துள்ளது.

மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்தவர் முத்தமிழ். இவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டவர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன் பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காவல்நிலையத்தில் இருந்து காவலர்கள் முத்தமிழை அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் கஞ்சா கொண்டு வந்த நபர் போன் பேசுவது போல் அங்கும் இங்கும் நடந்து காவலர்களுடன் இருந்த முத்தமிழிடம் காவலர்களுக்கே தெரியாமல் கஞ்சாவினை கொடுத்துள்ளார்.

வேறொரு நபரால் தனது செல்போனில் பதிவான இந்த காட்சிகள் சமூகவலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

முத்தமிழை அழைத்துச் சென்ற காவலர் கவனக்குறைவாக இருந்ததால் இது போன்று நடந்துள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கவனக்குறைவாக இருந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார். 

மேலும், மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்த குற்றவாளியிடம் கஞ்சா வழங்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் வழங்கப்பட்டதா என்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction