ஆய்வு செய்ய வந்ததுள்ளேன் என்று வனத்துறையினரை ஏமாற்றி கோவிலுக்குள் சென்ற  திமுக முன்னாள் எம்எல்ஏ…கோவையில் பரபரப்பு…

ஆய்வு செய்ய வந்ததுள்ளேன் என்று  வனத்துறையினரை  ஏமாற்றி கோவிலுக்குள் சென்ற  திமுக முன்னாள் எம்எல்ஏ…கோவையில் பரபரப்பு…

கோவை;

மருதமலையில் அனுமதி அளிக்கும் நேரத்தை கடந்து முன்னாள் தி.மு.க எம்எல்ஏ சாமி தரிசனம் செய்வதற்காக காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மருதமலையில் காட்டு யானைகள் நடமாட்டம், வன விலங்குகள் அங்கு குடிநீர் மற்றும் உணவுக்காக மருதமலை வனப் பகுதியில் சுற்றி திரிவது வழக்கம். சில தினங்களுக்கு முன்பு விவசாய நிலங்களுக்கு புகுந்து சேதத்தை ஏற்படுத்தியதாக விவசாயிகள் குற்றம் சாட்டி இருந்தனர். அந்த யானை கூட்டத்தை அங்கிருந்து மருதமலை வனப் பகுதியில் வனத்துறையினர் விரட்டினர்.

இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அங்கயற்கன்னி வனத்துறையின் அனுமதி இல்லாமல், வனத்துறை எச்சரித்தும் மருதமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், மலை அடிவாரத்திற்கு வந்த அவரது வாகனத்தை காவலர்கள் தடுத்து நிறுத்தி கேட்டபோது, ‘தான் தி.மு.க சேர்ந்தவர் என்றும், காவலுக்கு நின்று இருந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், திமுக காரர்கள் என்றால் மட்டும் அனுப்புவீர்களா..? எங்களையும் அனுமதியுங்கள் என்று பொதுமக்களும் போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction