நீங்க எல்லாரும் ஜெயிலுக்கு போறது உறுதி … எடப்பாடிக்கு வார்னிங் கொடுத்த ஆர்.எஸ்.பாரதி….

நீங்க எல்லாரும்  ஜெயிலுக்கு போறது உறுதி … எடப்பாடிக்கு வார்னிங் கொடுத்த  ஆர்.எஸ்.பாரதி….

பாளையங்கோட்டை;

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் இந்தி திணிப்பை எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் பாளையங்கோட்டை மண்டலத் தலைவர் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைக்கழக வழக்கறிஞர் சூரியா வெற்றிகொண்டான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.

அப்போது ஆர்.எஸ்.பாரதி பேசுகையில்,

 இன்று ஆளுனரைச் சந்தித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, ஊழல் நடக்கிறது. போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என புகார் அளித்துள்ளார்.

எடப்பாடியை பார்த்து கேட்கிறேன் உங்கள் ஆட்சியில் எல்.ஈ.டி பல்பு வாங்கியது, தொடப்பம் வாங்கியது முதல் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து நானும், சபாநாயகரும் வழக்கு தொடுத்துள்ளோம்.

மேலும் கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் குட்கா விற்பனை செய்ததாக நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசு சி.பி.ஐ யை வைத்து அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயகாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

தற்போது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டது. எனவே நீங்கள் அனைவரும் ஜெயிலுக்கு போவது உறுதி என எடப்பாடிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction