தங்க நகைக்கு கடன் வழங்குவதை அடுத்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிக்க டிபிஎஸ் பேங்க் இந்தியா திட்டம்….

தங்க நகைக்கு கடன் வழங்குவதை அடுத்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிக்க டிபிஎஸ் பேங்க் இந்தியா திட்டம்….

கோவை,

 நவ.23–  அடுத்த 5 ஆண்டுகளில் நகைக்கடன் வழங்குவதை 3 மடங்கு அதிகரிக்க டிபிஎஸ் பேங்க் இந்தியா திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் வங்கிகளிலேயே மிக அதிக வட்டி விகிதமாக வைப்புத்தொகைக்கு ஆண்டுக்கு 7.25 சதவீதம் வட்டி வழங்குவதாகவும் கூறியுள்ளது .இதற்கான வைப்புத்தொகை காலம்  600 நாட்கள்ஆகும்.

டிபிஎஸ் வங்கி தற்போது மொத்தம் 4500 கோடி ரூபாய்க்கான நகைக்கடன்களை வழங்கி உள்ளது. டிபிஎஸ் தங்க நகைக்கடன்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய நகைகளை முழுமையாக பயன்படுத்தும் விதம் மிகக்குறைந்த வட்டிவிகிதத்தில் வெறும் முப்பதே நிமிடங்களில் சிறந்த மதிப்பீட்டில் கடன் தொகையை பெறஇயலும்.

டிபிஎஸ் வங்கியின் இந்த பிரிவின் வளர்ச்சி குறித்து டிபிஎஸ் பேங்க் இந்தியாவின் எக்ஸ்க்யூட்டிவ் இயக்குனரும், ரீட்டெயில் வாடிக்கையாளர் பிரிவு தலைவருமான பரத்மணி கூறுகையில்,

“எங்கள் வங்கி இந்திய வங்கித்துறையில் நிலையான ஒரு இடத்தை பிடித்துள்ளது. தங்க நகைக்கடன்கள் போன்ற திட்டங்கள், மற்றும் வணிகப்பிரிவுகளில் விரிவாக்கப்பட்ட செயல்பாடுகள் ஆகியவை மூலம் டிபிஎஸ் வங்கியின் வளர்ச்சிக்கு பயனளிக்க தொடங்கியுள்ளன.

விவசாயிகள் இடையே தங்க நகைக்கடனுக்கான தேவை என்பது அதிகரித்து காணப்படுவதை நாங்கள் பார்த்து வருகிறோம். இந்த தேவையின் 70% தென்னிந்தியாவில் இருந்து வருகிறது.தற்போது நாங்கள் வழங்கி வரும் தங்க நகைக்கடனை 3 மடங்கு அதிகரித்து அடுத்த 5 ஆண்டுகளில் அதை 13,500 கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

அத்துடன் வாடிக்கையாளர்களுக்கான புதுமையான தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிச்சேவை தேவைகளை எங்களிடம் விட்டு விட்டு தங்களுடைய வாழ்க்கையை மேலும் சிறப்பாக வாழ முடியும்.’’ என்று தெரிவித்தார். இந்தியாவில் உள்ள பெரிய, நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர் [ரீட்டெயில்] வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை டிபிஎஸ் வங்கி வழங்கி வருகிறது.

மேலும் இவ்வங்கியின் நடப்பு மற்றும் சேமிப்புக்கணக்கு இருப்புடன் அதன் சில்லறை வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் இவ்வங்கி தெரிவித்துள்ளது. அடுத்த அதன் ஒட்டு மொத்த வருவாயில் 40 சதவீதம் பெரு நிறுவனங்களிடமிருந்தும், 60 சதவீதம் நுகர்வோர் சேவை மற்றும் சிறுகுறு மற்றும் நடுத்தர வணிகத்திலிருந்தும் பெறுவதை இலக்காகக்கொண்டுள்ளது.

முந்தைய லட்சுமிவிலாஸ் வங்கி கடந்த 2020–ம்ஆண்டு நவம்பர் மாதம் டிபிஎஸ் வங்கி இந்தியா உடன் இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு இந்திய அரசின் சிறப்பு அதிகாரங்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் வங்கி ஒழுங்கு முறை சட்டம், 1949–ன் பிரிவு4 5ன்கீழ் நடந்தேறியது. இந்த ஒருங்கிணைப்பு மூலம் தென்னிந்தியாவில் இந்தவங்கியின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது.

மேலும் தற்போது இவ்வங்கி 19 மாநிலங்களில் சுமார் 525 கிளைகளை கொண்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பானது நான்கு முக்கிய அம்சங்களான தயாரிப்பு மற்றும் செயல்முறை, கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் மக்கள் மற்றும் பிராண்ட் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

டிபிஎஸ்பேங்க் இந்தியாவின் நிதியாண்டு 2022 ஐ பொறுத்தவரை, இதன் நிகரலாபம் 167 கோடி ரூபாயாக உள்ளது. ஒருங்கிணைப்பினால அடைந்த பயன்களை இந்த வளர்ச்சி பிரதிபலிக்கிறது.

Leave a Reply