எடப்பாடி ஏன் ஆளுநரை சந்தித்தார் என்று தெரியுமா ?.. காரணம் சொன்ன தமிழக அமைச்சர் ….

எடப்பாடி ஏன்  ஆளுநரை சந்தித்தார்  என்று தெரியுமா ?.. காரணம் சொன்ன  தமிழக அமைச்சர் ….

விழுப்புரம் செய்திகள் ;

விழுப்புரம் அருகேயுள்ள வேம்பியில் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் அரசு நலத்திட்டம் வழங்கும் விழா மற்றும் புதிய மின் மாற்றி துவக்க விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி, ஆட்சியர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி;

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதை டிவியில்  பார்த்து தெரிந்து கொண்டதாக தெரிவித்தவர்  தான் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவினருக்கு பாடம் புகட்டுற வகையில் தமிழகத்தில் ஸ்டாலினை முதல்வராக்கி இருக்கிறார்.தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஆளுநரை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க சென்றது அதிமுக கட்சியில் அடித்துகொள்ளவதை ஆளுநரிடம் சொல்லி உள்துறை அமைச்சரிடம் ஆளுநர் தெரிவித்து சரி செய்ய முடியுமா  என்பதற்காக தான் ஆளுநரை சந்திக்க சென்றிருக்கிறார்கள். வெளியே வந்து எடப்பாடி பழனிசாமி அரசியல் பேச வேண்டா மென்று பேசினார்” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction