பால்வளத் துறை அமைச்சர் நாசரை உடனே நீக்குங்கள்… அந்த பொறுப்பை பிடிஆரிடம் ஒப்படையுங்கள்.. பால் முகவர்கள் சங்கம் திடீர் கோரிக்கை

பால்வளத் துறை அமைச்சர் நாசரை  உடனே நீக்குங்கள்… அந்த பொறுப்பை  பிடிஆரிடம்  ஒப்படையுங்கள்.. பால் முகவர்கள் சங்கம் திடீர் கோரிக்கை

சென்னை நியூஸ் ;

கடுமையான நிதியிழப்பில் சிக்கியுள்ள ஆவின் நிர்வாகத்தை மீட்டெடுக்க பால்வளத்துறையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்க வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஆவினில் பால் கொள்முதலையும், விற்பனையையும் அதிகரிக்க தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல், ஆவின் நிறுவனம் எந்த குறிக்கோளோடு தொடங்கப்பட்டதோ அதனை தற்போது அதிலிருந்து தடம் மாறி பயணிக்க ஏசி அறையில் அமர்ந்து கொண்டு இனிப்பு, கார வகைகள், கேக் என ஆவினை திசைமாற்றி கொண்டு செல்லும்  பால்வளத்துறை அமைச்சர் திரு. சா.மு.நாசர் அவர்களின் செயல்பாடுகள் ஆவினுக்கு கூடுதல் நிதியிழப்பை ஏற்படுத்தவே வழிவகுக்கும்.

எனவே ஆவின் இருக்கும் தற்போதைய சூழலில் ஆவினை மீட்டெடுக்க வேண்டுமானால் பால்வளத்துறையின் அமைச்சர் பொறுப்பை தமிழக நிதியமைச்சராக இருக்கும் திரு. பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் அவர்களிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைத்தால் ஒருவேளை தற்போதைய சூழலில் இருந்து ஆவின் மீண்டு வர வாய்ப்புள்ளது.

இல்லையெனில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகிப் போகும் என்பதையும் தமிழக முதல்வர் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என பொன்னுசாமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply