கோவையில் திமுக அரசிற்கு எதிராக வேலுமணி தலைமையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்… துவக்கி வைக்க வரும் எடப்பாடி …

கோவையில் திமுக அரசிற்கு எதிராக வேலுமணி தலைமையில் மாபெரும்  உண்ணாவிரத போராட்டம்… துவக்கி வைக்க வரும் எடப்பாடி …

கோவை செய்திகள் ;

திமுக அரசை கண்டித்து கோவையில் டிசம்பர் 2ம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சரும், கோவை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ தலைமையில், கோவை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சி பகுதிகளில் சாலைகளை சீரமைக்க தவறியதை கண்டித்தும், மின் கட்டணம், சொத்து வரி, கழிவு நீர் இணைப்பு கட்டணம் உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் டிசம்பர் 2-ந்தேதி சிவானந்தா காலணியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கும் நிலையில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி உண்ணாவிரதத்தை தொடங்கி வைக்கிறார்.  

Leave a Reply