“சபரிமலை ஐயப்பன்” குறித்து சர்ச்சை கருத்து – “சுந்தரவல்லி”க்கு அபராதம் விதித்த நீதிமன்றம்..!!

“சபரிமலை ஐயப்பன்” குறித்து சர்ச்சை கருத்து – “சுந்தரவல்லி”க்கு அபராதம் விதித்த  நீதிமன்றம்..!!

சபரிமலை ஐயப்பன் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பேராசிரியை சுந்தரவல்லிக்கு ரூ.3500 அபராதம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேராசிரியை சுந்தரவல்லி தனது சமூக வலைத்தளத்தில் ஐயப்பன் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு 3500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு பம்பை நதிக்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் அதில் ஐயப்ப பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் சுந்தரவள்ளி ஐயப்பன் கோயில் குறித்தும் சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்திருந்தார்

இந்த கருத்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை எழும்பூர் தலைமை நீதிமன்றம் பேராசிரியர் சுந்தரவள்ளிக்கு 3500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்து உள்ளது.

Leave a Reply