பணிக்கு வராத 11 அலுவலர்கள் சஸ்பெண்ட்.. கலெக்டர் அதிரடி உத்தரவு

பணிக்கு வராத 11 அலுவலர்கள் சஸ்பெண்ட்.. கலெக்டர் அதிரடி உத்தரவு

திருப்பத்தூர்: 

 திருப்பத்தூரில் நேற்று (நவ.26) மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் சிறப்பு கருக்கத் திருத்தம் (2023) தொடர்பாக சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

இம்முகாமினை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அமர்குஷ்வாஹா திடீர் தணிக்கையில் ஈடுபட்டார். அப்பொழுது பணியில் இல்லாத வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்ய திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் ஒரு அலுவலரும், ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில், நான்கு அலுவலரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் இரு அலுவலர்களில் ஒருவர் நிரந்தர பணி நீக்கமும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 6 அலுவலர்களில் ஒருவர் மட்டும் நிரந்தர நீக்கமும் என 11 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியிடை நீக்கமும் 3 அலுவலர்கள் நிரந்தர நீக்கமும் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அமர்குஷ்வாஹா அறிவித்துள்ளார்.

மேலும், இதேபோல் வாக்குச்சாவடி சிறப்பு முகாம்களில் பணியில் இல்லாத வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அமர்குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply