பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி என்ற பெயரில் காங்கிரஸ் பிரமுகர்கள் கொடுத்த செக் பவுன்ஸ்… குடும்பத்தார் அதிர்ச்சி …

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி என்ற பெயரில் காங்கிரஸ் பிரமுகர்கள் கொடுத்த செக் பவுன்ஸ்… குடும்பத்தார் அதிர்ச்சி …

உத்தரபிரதேசம் : 

லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள நிகாசனில், கடந்த செப்டம்பர் 14 அன்று இரண்டு இளம் தலித் சகோதரிகள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாநில காங்கிரஸ் பிரமுகர்களான வீரேந்திர குமார், ஒய்.கே.ஷர்மா மற்றும் அமித் ஜானி ஆகியோர் நிதியுதவி அளிக்கும் விதமாக காசோலைகளை வழங்கி உள்ளனர்.

இவ்வாறு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கியில் பவுன்ஸ் ஆனதால், நிதியுதவியைப் பெற முடியவில்லை. எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காசோலைகள் பவுன்ஸ் ஆனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில், நிதியுதவி அளித்த மூன்று காங்கிரஸ் பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக எஸ்பி அருண்குமார் சிங் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரகலாத் படேல் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply