போலி பத்திரபதிவு என்று கண்டறியபட்டால் உடனடி ரத்து… தமிழக அமைச்சர் எச்சரிக்கை…

போலி பத்திரபதிவு என்று கண்டறியபட்டால்  உடனடி ரத்து… தமிழக அமைச்சர் எச்சரிக்கை…

அம்பத்தூர்;

அம்பத்தூர் கிழக்கு பகுதி கொரட்டூர் பகுதி திமுக சார்பில் “உதிரத்தை கொடுத்து உதயத்தை வரவேற்போம்” எனும் தலைப்பில் மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெற்று வருகிறது.

 இந்த ரத்த தான முகாமில் சுமார் 300கும் மேற்பட்டோர் ரத்தம் வழங்கினர். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அம்பத்தூர் எம்எல்ஏ மண்டலக்குழு தலைவர் பி கே மூர்த்தி உள்ளிட்டோர் ரத்தம் வழங்கியவர்களுக்கு  சான்றிதழ்களை வழங்கினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள், போலி பத்திரப்பதிவு நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,

போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் ரத்து செய்து உரியவருக்கு பத்திரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply