தமிழக ஆளுநர் மாளிகையை பராமரிக்க இத்தனை கோடியா?… தமிழக நிதியமைச்சர் ஆச்சர்யம் …

தமிழக ஆளுநர் மாளிகையை  பராமரிக்க  இத்தனை கோடியா?… தமிழக நிதியமைச்சர் ஆச்சர்யம் …

மதுரை;

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை பராமரிப்புக்கு அதிக தொகை ஒதுக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி பல கேள்விகளை எழுப்புகிறது என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அந்த செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை டுவிட்டரில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஷேர் செய்துள்ளார்.

அந்தச் செய்தியில், “ஆளுநர்கள் (ஊதியங்கள், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள்) சட்டம் (1982 இல் 43), 1982-ஆம் ஆண்டு சட்டத்தின்படி, ஆளுநர்கள் மற்றும் ஆளுநர் மாளிகைகள் செலவழிக்கும் தொகையை நிர்வகிக்கிறது.

பல்வேறு பிரிவுகளில் அதிகபட்ச தொகை ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்படும். இந்தத் தொகை ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள், அங்கு வாங்கப்படும் பொருட்கள், , ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால் அதை சரிசெய்வதற்கான செலவுகள், தோட்டங்களை பராமரித்தல், மின்சார செலவு, தண்ணீர், பொழுதுப்போக்கு, பராமரிப்பு, மரச்சாமான்களை சரிசெய்தல், அலுவலக ரீதியிலான பயணச் செலவுகள் ஆகியவையும் இதில் அடங்கும்.

ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை பராமரிக்க தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ.6.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஆளுநர்களின் பயணம், அலுவலச் செலவுகள் போன்றவற்றிற்கு ரூ.1.66 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட பதிவில், “இந்த தகவல் ஃபிரண்ட்லைன் இதழில் வெளியானது. இது உண்மைதானா என்பதை தெரிந்து கொள்ள முயற்சித்து வருகிறேன்.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு இவ்வளவுத் தொகை செலவழிக்கப்படுகிறதா? இது ஆச்சரியத்தை அளிக்கிறது! 
உடன் பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply