அதிமுகவில் இருந்து சென்ற 8 பேர் தற்போது திமுக அமைச்சரவையில் அமைச்சர்கள் …திமுகவில் என்றுமே உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை… கோவையில் பேசிய எடப்பாடி …

அதிமுகவில் இருந்து சென்ற 8 பேர் தற்போது திமுக அமைச்சரவையில்   அமைச்சர்கள் …திமுகவில் என்றுமே உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை…   கோவையில் பேசிய எடப்பாடி …

கோவை;

திமுக அரசைக் கண்டித்து கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. கோவையில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க கோரியும், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும் இந்த  போராட்டம் நடைபெற்றது . 

இந்த போராட்டத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமியும் கலந்து கொண்டார் .

 இதில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிசாமி, 

திமுக அமைச்சரவையில் இருப்பவர்கள் 8 பேர் அதிமுகவினர். திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. வேடந்தாங்கல் பறவை போல் ஆட்சி முடிந்ததும் சீசனுக்கு சென்றவர்களின் பேச்சினை கேட்டுக் கொண்டு ஆடுகிறார்.

18  விடியா திமுக ஆட்சியில் என்ன நன்மை ஏற்பட்டுள்ளது. என்ன புதிய திட்டம் கொண்டு வந்தார்கள்? 18 மாத அலங்கோல ஆட்சியில் மக்கள் துன்பம்தான் அடைந்துள்ளனர். 

தமிழ்நாட்டில் கார்ப்ரேட் ஆட்சி நடக்கிறது. ஒரு கம்பெனி தமிழ்நாட்டினை ஆட்சி செய்கிறது.

சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தியுள்ளனர். மக்கள் மீது சுமையை திமுக அரசு சுமத்தியுள்ளது. 53 சதவீதம் மின் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது.

சொத்து வரி, மின் கட்டண உயர்வு மக்கள் வயிற்றெச்சல், கோபத்தை உண்ணாவிரத போராட்டம் மூலம் வெளிக்காட்டுகின்றனர்.

பால் விலை உயர்வு முழுவதும் நீக்கப்பட வேண்டும். பொய் வழக்கால் அதிமுகவை முடக்க முடியாது. அதிமுகவின் வளர்ச்சியை ஒரு ஸ்டாலின் மட்டும் இல்லை ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் தடுக்க முடியாது” எனவும் ஆவேசமாக பேசினார்.

Leave a Reply