16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு ..

16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு ..

சென்னை;

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இளைஞர் நலன் விளையாட்டுத்துறை செயலாளராக அதுல்ய மிஸ்ராவும், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக ஜான் லூயிஸ் என்பவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வீட்டு வசதித்துறை செயலாளராக இருந்த ஹிதேஸ்குமார் மக்வானா, டெல்லி தமிழ்நாடு இல்ல கூடுதல் தலைமை செயலர் அதுல்யா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய மேலாண் இயக்குநர் எஸ்.ஜே.சிரு சமூக நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலாண் மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலாளர் டி.ஆபிரகாம், சமூக சீர்திருத்த துறை செயலாளராகவும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குநராக இ.சரவண வேல்ராஜ் என்பவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நகர் ஊரமைப்பு இயக்கக திட்ட இயக்குநராக வி.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக எஸ்.பழனிசாமி, பேரூராட்சிகள் இயக்குநராக கிரண் குராலாவும், வருவாய் நிர்வாகம் ஆணையராக இருந்த ஜான் லூயிஸ் அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் சாகோசெர்வ் மேலாண் இயக்குநராக ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.என்.பூங்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். 

Leave a Reply