கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல இனி தடை…நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழக அமைச்சர் அறிவிப்பு..

கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல இனி தடை…நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழக அமைச்சர் அறிவிப்பு..

சென்னை;

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப்படும் என மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “ஆடை கட்டுப்பாடு குறித்து துறை ரீதியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவு செய்யப்படும்.

முதற்கட்டமாக பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ள 509 கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது கோவில்களில் பக்தர்களின் ஆடைக் கட்டுப்பாடு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படும். செல்போன் கொண்டு செல்ல தடை உத்தரவு வரவேற்கத்தக்கது.

திருவண்ணாமலை கோவிலில் சாமி சிலையில் சிசிடிவி பொருத்தியது கண்டிக்கதக்கது. கவனத்திற்கு வந்தவுடன் சரி செய்யப்பட்டது. கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

Leave a Reply