ஸ்டாலின் உறுமலுக்கு பயந்து பதுங்கும் பூனைதான் தமிழக பாஜக..! சுப்பிரமணியன் சாமி கிண்டல் ..

ஸ்டாலின் உறுமலுக்கு  பயந்து பதுங்கும் பூனைதான்  தமிழக பாஜக..!  சுப்பிரமணியன் சாமி கிண்டல் ..

சென்னை;

பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து ஆலயங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும்  நீண்ட நாட்களாக தமிழகத்தில் இந்து ஆலயங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இவை அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25 மற்றும் 26 எதிரானது என்றும் கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து ஆலயங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தான் கூறியபடி முதல்வர் ஸ்டாலின் செய்யாவிட்டால் தமிழக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாகவும் சுப்பிரமணியசாமி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தமிழக பாஜகவை விமர்சிக்கும் வகையில் டுவிட்டர் பதிவு ஒன்றை சுப்பிரமணியன் சாமி வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழ்நாட்டில் நான் மட்டும் தான் திமுகவை எதிர்ப்பதுபோல் உள்ளது. ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழ்நாடு பாஜக உள்ளது.

சினிமா கலாசாரம் தமிழ்நாடு பாஜகவை சீரழித்துவிட்டது என சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். 

Leave a Reply